75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தனது ஆட்டோவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.அதுவோ ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அடம்பிடித்தது. இதுதான் தருணமென அருகில் சென்ற நான்,
“ஏன் அங்கிள் கேசுக்கு மாறினால் ரொம்ப ஈஸியா ஸ்டார்ட் ஆகிடுமே” என்றேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவரின் கண்களில் தெரிந்தது எனது கருத்தின் சாத்தியமின்மையும் அவரது இயலாமையும். “அதை ஏம்மா கேக்கிற, கேசுக்கு மாறனுமின்னா 18,000 ரூபா வேணும். சாவரியே ஆகமாட்டேங்குது. அதோட மீற்றர் வேற போடனுங்கிறாங்க. இந்த லட்சணத்தில பணத்துக்கு எங்க போறது?” என்றார் கோவிந்து என்கிற கோவிந்த சாமி.
ஆட்டோக்கள் கேசுக்கு மாறுவது சாத்தியமா?
செப்டம்பர் 14, 2007 இல் 11:10 மு.பகல் (Features)


